இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்…

by Lifestyle Editor

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் தங்கம் விலை நேற்று ஏப்ரல் 14ஆம் தேதி சவரனுக்கு ரூ.520 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று ஏப்ரல் 16 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,870-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,628-க்கும் சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,024-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.90.50-க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.90,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment