பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொவிட் பாதிப்பு உச்சத்தை தொட்டது: ஒரே நாளில் 78,610பேர் பாதிப்பு!

by Column Editor

பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு, உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி நேற்று (புதன்கிழமை) மட்டும் 78,610பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன், கடந்த ஜனவரி 8ஆம் திகதி 68,053பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டதே சாதனை அளவாக இருந்தது.

உலக அளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக, ஒரு கோடியே 10இலட்சத்து பத்தாயிரத்து 286பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 46ஆயிரத்து 791பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்த தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி, “இந்த எண்ணிக்கை அடுத்த சில வாரங்களில் அதிகரிக்கும். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, சமூக கொண்டாட்டங்கள் தொடர்பாக மக்கள் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும்.

இரண்டு விதமான நோய் தொற்று நாட்டில் பரவி வருகின்றது. ஒன்று, வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் திரிபு மற்றொன்று டெல்டா திரிபு’ என கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment