பிபின் ராவத்துக்கு நிலை என்ன ஆச்சு? – குன்னூருக்கு விரைந்த 10 மருத்துவர்கள்

by Column Editor

நீலகிரியில் நடந்துள்ள ராணுவ ஹெலிகாப்டர் விபத்து இந்திய மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அகில இந்திய ராணுவத்தின் மிக மிக உயரிய அதிகாரியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும், அவரது மனைவியும் இந்த ஹெலிகாப்டரில் பயணித்திருக்கிறார்கள்.

இந்தச் செய்தியை இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கொண்ட 10 பேர் குழு இந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்றிருக்கிறது.

அதேபோல அவசர நிலை கருதி இரு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக முன்னேற்பாடு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த விபத்து நடைபெற்ற பகுதிக்கு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த ராணுவத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment