குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

by Column Editor

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்துகொண்டு இருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகலில் வெலிங்டனில் உள்ள மையத்துக்கு புறப்பட்டு சென்றது.

அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்துகொண்டு இருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்துள்ளது. ஹெலிகாப்டரில் ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 4 பேர் பயணம் செய்தனர்.

இந்த சம்பவம் அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

ஹெலிகாப்டரில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Related Posts

Leave a Comment