புயல் காரணமாக அயர்லாந்து, வேல்ஸில் ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிப்பு

by Column Editor

பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக அயர்லாந்து முழுவதும் சுமார் 38,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 130கிமீ வேகத்தில் கற்று வீசுவதனால் இன்று புதன்கிழமை மதியம் வரை டொனேகல் கவுண்டியில் செம்மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்படும் என அந்நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மின்சாரம் செயலிழந்துள்ள நிலையில் டொனேகல், கார்க், வெக்ஸ்ஃபோர்ட் மற்றும் கெர்ரி முழுவதும் 26,000 வாடிக்கையாளர்களுக்கு நீர் தொடர்பான அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 138 கி.மீ. வேகத்தில் கற்று வீசுவதனால் வேல்ஸில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு பயணத் தடைகளும் ஏற்பட்டுள்ளன.

12 வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பல ரயில் சேவைகளில் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment