ஆண்களின் கழிப்பறைகளில் புற்றுநோயை கண்டறியும் விரிப்பான்

by Lifestyle Editor

புற்று நோயை முன்கூட்டியே கண்டறிவதை அதிகரிப்பதற்காக, இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை பொதுக் கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்கும் விரிப்பான்களை நிறுவ உள்ளது.

சிறுநீர்ப்பை, சிறுநீரகம் அல்லது புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கக்கூடிய சிறுநீரில் இரத்தத்தைக் கண்டால், உதவியை நாடுமாறு ஆண்களை வலியுறுத்தும் செய்தியை இந்த நவீன சிறுநீர் கழிக்கும் விரிப்பான்கள் வெளிப்படுத்தவுள்ளது.

பப்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், கால்பந்து மைதானங்கள் மற்றும் சில பணியிடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கழிவறைகளில் அவை நிறுவப்படும்.

இதன்மூலம் 2028ஆம் ஆண்டுக்குள் 75 சதவீத புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை நம்புகிறது.

அத்துடன், விரிப்பான்கள் சிறுநீர் கழிப்பறைகளில் வைக்கப்பட்டு துர்நாற்றத்தை குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் சமீபத்திய இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை ஆராய்ச்சியைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட பாதி ஆண்களுக்கு (49 சதவீதம்) சிறுநீரில் இரத்தம் தோன்றுவது புற்றுநோயின் அறிகுறி என்று தெரியவில்லை.

மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான ஆண்கள் (39 சதவீதம்) மருத்துவரைச் சந்திப்பதற்கு முன், அறிகுறி மீண்டும் வருவதற்குக் காத்திருப்பதாகவும் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

Related Posts

Leave a Comment