கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய விவகாரம் தொடர்பாக பொரிஸ் ஜோன்சனிடம் விசாரணை

by Lifestyle Editor

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய விவகாரம் தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் விசாரணை இடம்பெறவுள்ளது.

விசாரணையின் போது அவர் மன்னிப்பு கோருவார் என்றும் தொற்றுநோயின் போது தனது அரசாங்கம் விடுத்த தவறுகளை ஒப்புக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், இந்த விசாரணை இடம்பெறும் இடத்திற்கு முன்பாக ஒன்றுகூடவும் திட்டமிட்டுள்ளனர்.

2019 மற்றும் 2022 க்கு இடையில் மூன்று ஆண்டுகள் பிரதமராக இருந்த பொரிஸ் ஜோன்சன், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் டவுனிங் ஸ்ட்ரீட்டில் விருதுபசாரத்தில் கலந்துகொண்டிருந்தார்.

நாடளாவிய ரீதியில் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்த போது இடம்பெற்ற இந்த விருந்துபசார நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

Related Posts

Leave a Comment