ஒமிக்ரோன்: கிறிஸ்மஸுக்கு முன் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

by Column Editor

கிறிஸ்மஸூக்கு முன்னதான காலப்பகுதியில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு, பிரதமரும் இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரியும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில், பிரதமர் பொரிஸ், பப்கள் மற்றும் உணவகங்களை மூடவில்லை என அறிவித்தார். அத்துடன், மக்கள் அங்கு செல்வதற்கு முன் கவனமாக சிந்திக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி, தேவையில்லாத மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டாமென மக்களை வலியுறுத்தினார்.

ஓமிக்ரோன் முற்றிலும் தனித்துவமான வேகத்தில் நகர்கிறது என்றும், மிகப் பெரிய எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளை இங்கிலாந்து காணும் என்றும் அவர் கூறினார்.

பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு, உச்சத்தை எட்டிய அதே நாளில் இவர்களின் கருத்து வெளிவந்துள்ளது. நேற்று மட்டும் சாதனை அளவாக 78,610 புதிய கொவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

Related Posts

Leave a Comment