கண்ணம்மாவை கட்டியணைத்து உறங்கும் பாரதி- சீரியலின்அழகிய புரொமோ

by Column Editor

விஜய் தொலைக்காட்சி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. நாயகன்-நாயகி இருவரும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.

சந்தோஷமாக அவர்கள் வாழ இடையில் வெண்பா என்ற வில்லி வந்து அவர்களின் சந்தோஷத்தில் பெரிய குண்டை போட இருவரும் 8 வருடங்களுக்கு மேல் பிரிந்து வாழ்கிறார்கள்.

கண்ணம்மாவிற்கு தனது குழந்தைக்கு அப்பா யார் என்று தெரிய வைக்க வேண்டும் என போராடுகிறார். அதற்கான ஒரு புள்ளியாக இருவரும் 6 மாதம் சேர்ந்து வாழ வேண்டும் என்று நீதிமன்றம் கூற ஒரே வீட்டில் இருந்து வருகிறார்கள்.

அண்மையில் வெளிவந்த புரொமோவில் பாரதி-கண்ணம்மா இருவரும் ஒன்றாக உறங்குகிறார்கள்.

அந்த அழகிய புரொமோவை பார்த்த ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment