மாட்டு சாணத்தில் விளையாடும் போட்டியாளர்கள்… குதூகலமான பிக்பாஸ் வீடு !

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாணத்தில் காயின் எடுக்கும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

கடந்த இரு நாட்களாக தாயம் போன்று பெட்டியை வைத்து புதிய டாஸ்க் விளையாடப்பட்டு வந்தது. இந்த டாஸ்க்கில் விளையாடும்போது முதலில் ராஜூவிடம் சண்டைப்போட்டார் அக்ஷரா. இந்த சண்டையின்போது தலையிட்டதால் பிரியங்காவுடனும் அக்ஷரா சண்டை போட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த ப்ரோமோதான் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் மாட்டு சாணம் என்ற புதிய டாஸ்க் இன்று கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கின்படி போட்டியாளர்கள் கார்டன் ஏரியாவில் உள்ள தொட்டியில் இறங்கி அதில் உள்ள காயின்களை எடுக்கவேண்டும். யார் அதிக காயின் எடுக்கிறார்களோ, அவரே டாஸ்க்கில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இதையடுத்து இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடுகின்றனர்.

முதலில் அபினய், தாமரை, அமீர் ஆகிய மூவரும் விளையாடுகின்றனர். அப்போது மூவரும் துழாவி காயினை எடுக்கின்றனர். இதில் தாமரை அதிக காயினை சேகரித்ததாக தெரிகிறது. இதனால் மகிழ்ச்சியில் திளைக்கும் தாமரை, வருணின் சட்டையில் சாணத்தை பூசுகிறார். இதையடுத்து நடனமாடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். வித்தியாசமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் விளையாடுவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment