விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’… டீசர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

by Column Editor

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ‘லைகர்’ படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசெர் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். அவரது படங்களுக்கு இந்திய அளவில் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்து வருகிறார். பாக்சிங் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா சர்வதேச குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

லைகர் படத்தில் உலகளவில் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இணைந்துள்ளார். அவர் இந்தப் படத்தின் மூலம் தான் முதன் முதலில் இந்திய சினிமாவில் அறிமுகம் ஆகிறார். மைக் டைசன் படத்தில் இணைந்துள்ளது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த லைகர் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 31-ம் தேதி படத்தின் முன்னோட்டம் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி லைகர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகர் திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

Related Posts

Leave a Comment