ரஷ்ய ஜனாதிபதி புடின்- வெளியுறவு அமைச்சருக்கு எதிராக தடைகளை விதித்தது பிரித்தானியா!

by Column Editor

ஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைகளை விதித்துள்ளது.

பிரித்தானியாவின் தடைகள் பட்டியலின்படி, இவர்கள் இருவரும் சொத்து முடக்கத்தை எதிர்கொள்வார்கள். ஆனால் பயணத் தடை அல்ல.

ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு நுழைந்ததையடுத்து பிரித்தானியாவின் இந்த தடைகள் அறிவிப்பு வந்துள்ளது.

புடினின் ஆக்கிரமிப்புச் செயல் தோல்வியடைவதை உலகம் உறுதி செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மேற்கு நாடுகளின் கண்டனத்தையும், பதிலடித் தடைகளையும் தூண்டியுள்ளது.

Related Posts

Leave a Comment