ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான ஒன்பது பேர் வைத்தியசாலையில் – ராப்

by Column Editor

பிரித்தானியாவில் தற்போது ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான ஒன்பது பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஸ்கை நியூஸில் இன்று காலை வழங்கிய விசேட செவ்வியில் 250 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாக கூறியிருந்தார்.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியான நோயாளிகள் தொடர்பாக அரசாங்கம் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக டொமினிக் ராப் கூறினார்.

தடுப்பூசித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மக்களுக்கு உறுதியளித்த அவர், தடுப்பூசி ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக 70 விகித பாதுகாப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

தற்போது 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட 41 விகிதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான முதலாவது மரணம் நேற்று பதிவாகியதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனினால் உறுதிப்படுத்தப்பட்டது.

Related Posts

Leave a Comment