கவனம் ஈர்க்கும் ‘ரைட்டர்’ படத்தின் போஸ்டர் டிசைன்கள்!

by Column Editor

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாயுள்ள ரைட்டர் படத்தின் போஸ்டர் டிசைன்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பிராங்கிளின் ஜேக்கப் என்பவர் இயக்கத்தில் சமுத்திரக்கனி ‘ரைட்டர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இனியா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷன் பிலிம்ஸ் ஆகியவற்றுடன் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி காவலராக நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் பேசுபொருளாக மாறியது. காவலர்கள் எவ்வாறு உயர் அதிகாரிகளால் நடத்தப்படுகிறார்கள் என்பதைக் காண்பித்திருந்தனர்.

ரைட்டர் படத்தின் போஸ்டர் டிசைன்கள் அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஒவ்வொரு டிசைனும் ஒவ்வொரு வகையில் படத்தின் கதையை ஆழமாக எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் என்பவர் இந்த போஸ்டர்களை டிசைன் செய்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக வெளியான பெரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ உள்ளிட்ட படங்கள் போலவே இந்தப் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் டிசம்பர் 24-ம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment