எதிரியானாலும் சாப்பிடும்போது இப்படி பேசாதீங்க.. பிரியங்காவை எச்சரித்த சிபி..

by Column Editor

சாப்பிடும்போது எதிரியானாலும் இப்படி பேசுவது எனக்கு பிடிக்காது என பிரியங்காவை சிபி எச்சரித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தற்போது மூன்று அரசியல் கட்சி குழுவாக பிரிந்து செயல்பட்டு வருகிறார். இப்படி செயல்படும்போது மூன்று குழுவுக்கும் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று கார்டன் ஏரியாவில் உள்ள இருக்கும் கம்பத்தில் யார் முதலில் தங்களது கொடியை குத்துவது என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வந்தனர்.

இந்த டாஸ்க்கின்போது இமான் அண்ணாச்சி மற்றும் தாமரைச்செல்வி சண்டைப்போட்டுககொண்டனர். இதைதொடர்ச்சியாக இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோவில், பிரியங்கா தலைமையில் செயல்படும் அணியில் பாவனி, அபினய், அமீர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். அவர்கள் பாட்டுபாடி தங்களது கட்சியின் பிரச்சாரத்தை செய்கின்றனர்.

இதையடுத்து கிச்சனில் போட்டியாளர்கள் சாப்பிடும் காட்சி காட்டப்படுகிறது. அப்போது அங்கு வரும் பிரியங்கா, எல்லாருக்கும் சாப்பாடு இருக்கா என்று பார்த்துவிட்டு சாப்பிடுங்க என்கிறார். இதனால் டென்ஷனாகும் சிபி, சாப்பிடும்போது எதிரியாக இருந்தாலும் இப்படி பேசுவது எனக்கு பிடிக்காது என்று பிரியங்காவை எச்சரிக்கை தொனியில் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment