இன்று தீபாவளி என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பண்டிகையை கொண்டாடிய போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் சர்ரைஸ் ஒன்றினைக் கொடுத்து அனைவரையும் ஆனந்த கண்ணீரில் மூழ்கவைத்துள்ளனர்.
முதல் இரண்டு வாரம் பாசமாக சென்று கொண்டிருந்த இந்நிகழ்ச்சி தற்போது போட்டி பயங்கரமாக இருந்ததால், அனைத்து போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதம், சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இன்றைய ப்ரொமோ காட்சியில், பிக்பாஸ் வீட்டில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீடுகளிலிருந்து பிடித்த உணவு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கண்ணீர் வடித்து தங்களது உறவுகளை நினைவு கூர்ந்துள்ளனர். மற்றொரு ப்ரொமோ காட்சியில் போட்டியாளர்களின் குடும்ப புகைப்படத்தினை பிக்பாஸ் ரிவியில் காட்டப்பட்டதை அவதானித்த போட்டியாளர்கள் கண்ணீர் சிந்திய நிலையில் காணப்பட்டதும், பிக்பாஸ் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.