251
இன்று தீபாவளி கொண்டாட்டம் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடிவரும் நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் தீபாவளி கொண்டாட்டம் அரங்கேறியுள்ளது.
இந்த கொண்டாட்டத்திற்காக வெளியே இருந்து சில பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் மா.கா.பா-வும் உள்ளே சென்ற நிலையில், பிரியங்கா அவரைப் பார்த்து ஓடி வந்து கதறி அழுதுள்ளார்.
ஆனால் வெளியே இருந்து சென்ற விருந்தினருக்கும், போட்டியாளருக்கும் இடையே கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டதால், கட்டித்தழுவி பாசத்தினை வெளிப்படுத்த முடியாமல் பிரியங்கா கதறிய காட்சி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.