இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த அஞ்சலிக்கு ஏற்பட்ட சோகம் – பாரதி கண்ணம்மா

by Column Editor

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கலக்கி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாரதிகண்ணம்மா நெடுந்தொடர். தற்பொழுது விறுவிறுப்பாக பல புதிய திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் மேலும் பல சுவாரசிய சம்பவங்கள் ஏற்பட காத்திருக்கின்றன.

அதேவேளையில் நீண்ட நாளாக மக்கள் எதிர்பார்த்த வகையில் பாரதியும் கண்ணம்மாவும் சில சமயத்தில் இணைவது போல பல காட்சிகள் வெளியாகி மக்களைக் குஷிபடுத்திய நிலையில் மற்றும் ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்க காத்திருக்கின்றன.

அந்த விதமாக பிரசவ நேரத்தை நெருங்கும் அஞ்சலிக்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவளுக்கும் கண்ணம்மா போல இரட்டை குழந்தைகள் பிறப்பது போல அடுத்த எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

ஏற்கனவே நெஞ்சு வலி பிரச்சனையால் அவதிப்படும் அஞ்சலி பிழைக்கக்கூடாது என்னும் நோக்கத்தோடு வெண்பா,பாரதி கொடுத்ததை போல மருந்தை மாற்றி கொடுத்து அதையும் அஞ்சலி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயிர் பிழைக்க இருந்த சிறிதளவு வாய்ப்பும் இல்லாமல் போய்விடுமோ என்ற நிலை ஏற்பட உள்ளது.

மேலும் சுமுகமாக பிரசவமடைந்த அஞ்சலி பிறகு நெஞ்சுவலியால் அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பிழைப்பாரா? பிழைக்க மாட்டாரா? மற்றும் வெண்பாவின் சதி வெளிவருமா? என்னும் பல திருப்பங்கள் வெளிவர காத்துள்ளன.

கடந்த சில நாட்களாகத் தான் அஞ்சலி சீரியலில் நல்லவிதமாக காட்டப்பட்டு வருவதால் அவர் தொடர்ந்து சீரியலில் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்

Related Posts

Leave a Comment