முக்கிய சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தை அதிரடியாக மாற்றிய சன் டிவி…!

by Lifestyle Editor

சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் என சொல்லும் அளவுக்கு பல வருடங்களாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூடிய பல்வேறு பிளாக்பஸ்டர் சீரியல்களை ஒளிபரப்பி டிஆர்பியிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது சன் டிவி. இல்லத்தரசிகள் மட்டுமின்றி சமீப காலமாக இளைஞர்களும் விரும்பிப் பார்க்கும் வகையில் சீரியல்கள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் டிஆர்பி-யும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த அன்பே வா சீரியல் அண்மையில் முடிவடைந்தது. அந்த சீரியல் நிறைவடைந்த நிலையில் மல்லி என்கிற புத்தம் புது நெடுந்தொடரை களம் இறக்கி உள்ளது சன் டிவி. அந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது அதற்கான டைம் ஸ்லாட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் மல்லி சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மல்லி சீரியலுக்கு 9.30 மணி ஒதுக்கப்பட்டு உள்ளதால், அந்த நேரத்தில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த இனியா சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற திங்கள் முதல் இனியா நெடுந்தொடர் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி வாரத்தின் 7 நாட்களும் அந்த தொடர் ஒளிபரப்பாகும் என்கிற சர்ப்ரைஸ் அப்டேட்டையும் வெளியிட்டு உள்ளனர்.

இனியா சீரியல் 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதால் அந்த நேரத்தில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் மனைவி சீரியல் இனி திங்கள் முதல் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் இந்த சீரியலின் கதாநாயகி மாற்றப்பட்ட நிலையில், தற்போது சீரியல் ஒளிபரப்பு நேரமும் மாற்றப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இனியா சீரியல் 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதால் அந்த நேரத்தில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் மனைவி சீரியல் இனி திங்கள் முதல் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் இந்த சீரியலின் கதாநாயகி மாற்றப்பட்ட நிலையில், தற்போது சீரியல் ஒளிபரப்பு நேரமும் மாற்றப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment