பிரியங்காவின் ஆட்டத்தை வருண் அடக்குவாரா? இனிமே தான் தரமான சம்பவம் இருக்கு!

by Column Editor

பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த டாஸ்கில், பிரியங்கா, ஐக்கி, சிபி, நிரூப் என 4 பேர் போட்டியிட்டனர். இறுதியில் பிரியங்காவின் பவுலில் குறைந்த அளவு சாயம் இருந்ததால், அவர் இந்த வாரத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.மேலும், நாணயத்தை வைத்திருக்கும் பவானி மற்றும் நிரூப்பிடம் நாணயத்தை பயன்படுத்தி தலைவரை மாற்றும் எண்ணம் உள்ளதா என பிக் பாஸ் கேட்டார்.

இதற்கு இருவரும் நோ சொல்லிவிட்டதால் இந்த வாரத்தின் தலைவராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, நீர் நாணயத்தை வைத்திருக்கும் வருணுக்கு இந்த வாரம் வீட்டை ஆளும் பவர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வருண் பாத் ரூம் ஏரியாவை இந்த வாரம் முழுவதும் ஆளுமை செய்து கொள்ளலாம்.

அவர் ஆட்சி செய்வதற்கு வசதியாக பாத்ரூம் அருகில் ஒரு சோபா போடப்பட்டுள்ளது.

பாத்ரூம் ஏரியாவை நடக்க வேண்டுமென்றாலும், பாத்ரூமிற்கு செல்ல வேண்டும் என்றாலும் வருண் கொடுக்கும் டாஸ்கை முடித்து விட்டு தான் செல்ல முடியும்.அவ்வாறு சரியாக செய்யாத நபருக்கு தண்டனை கொடுக்கும் உரிமை அவருக்கு உண்டு.இது மட்டுமில்லாமல் பாத்ரூம் ஏரியாவில் தண்ணீரை பயன்பாட்டை எப்போது வேண்டுமானாலும் இவர் நிறுத்தி வைக்கலாம் இப்படி பல அதிகாரங்களை பிக் பாஸ் வருணுக்கு கொடுத்திருக்கின்றார்.

இதனால் இந்த வார நிகழ்ச்சி இன்னும் சுவாரஷ்யமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment