293
கிளாஸ்கோவில், நூற்றுக்கணக்கான காலநிலை மாற்ற எதிர்ப்பாளர்கள் அணிவகுத்துச் சென்ற பேரணியில், ஐந்து ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.எஸ்.இ. எரிசக்தி நிறுவனத்திற்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரண்டு ஆர்வலர்கள் கட்டிடத்திற்குள் நுழைய முயன்றதால், மோதல் வெடித்தது.
இதன்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது ஸ்ப்ரே அடித்ததாக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.
எனினும், கார்ப்பரேட் ‘கிரீன்வாஷிங்’க்கு எதிரான பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடந்தன. ஏனெனில் அணிவகுப்பாளர்களுடன் அதிகாரிகள் இருந்தனர்.