திமுக கொடிக்கம்பம் விழுந்து 10 வயது சிறுமிக்கு மூக்கு தண்டு உசைந்தது…

by Column Editor

சேலம் தாதகாபட்டி பகுதியில் திமுக கொடிக்கம்பம் நடும் பணியின் போது, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 10 வயது மாணவி ப்ரியதர்ஷினி மீது கொடிக்கம்பம் விழுந்ததில் மூக்குத்தண்டு உடைபட்டது.

தமிழக முதல்வர் மு,க ஸ்டாலின் வரும் 11 ஆம் தேதி , அரசு நிகழ்ச்சிக்காக சேலம் மாவட்டம் செல்ல இருக்கிறார். இதனையொட்டி முதல்வரை வரவேற்பது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து சேலம் மாவட்ட முதன்மை செயலாளரும், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தவரிசையில் அவர் தாதகாப்பட்டி பகுதிக்கு செல்ல இருக்கிறார்.

இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்பதற்காக தாதகாப்பட்டி பகுதி முழுவதும் திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வந்தன. அப்போது அதேபகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய 10 வயது மகள் ப்ரியதர்ஷினி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் அவர் மீது விழுந்ததில் சிறுமியின் மூக்குத்தண்டு உடைபட்டது. காயமடைந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment