சஞ்சீவை மாட்டி விடும் நிரூப் – ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ்!

by Column Editor

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்கள் விவரம் குறித்து பிக் பாஸ் அறிவிக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக 9 வாரங்களை நிறைவு செய்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் நமீதா, நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, ஐக்கி பெர்ரி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இதனிடையே அபிஷேக் மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அவரை தொடர்ந்து சஞ்சீவ் , அமீர் ஆகிய இருவரும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ளனர். கடந்த வாரம் ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, இமான், பாவ்னி, அக்ஷ்ரா, வருண், அபினய் மற்றும் அபிஷேக் ஆகிய 10 பேர் நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் இவர்களில் அபிஷேக் மீண்டும் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறியுள்ளார்.

இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் மற்றும் நாமினேஷன் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இன்று தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெறுவதும், அதில் அமீர் வெற்றி இன்றைய முதல் ப்ரோமோவில் உள்ளது. மேலும் தனது நாணயத்தின் பவரை பயன்படுத்தி தலைவர் பதவியை பாவ்னி எடுத்து கொள்கிறார்.

இரண்டாவது ப்ரோமோவில், அக்ஷ்ரா, பாவ்னியை உதவியாளர் என அழைக்கிறார். நாணயத்தை பயன்படுத்தி தலைவர் பதவியை பறிக்கும் நபர்களுக்கு பிக் பாஸ் வித்தியாசமான தண்டனைகளை வழங்கி வருகிறார். அதன்படி பாவ்னிக்கு உதவியாளராக இருக்க வேண்டும் என தண்டனை வழங்கப்படுகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக அக்ஷரா, பாவ்னியை வேலை வாங்குகிறார்.

அதற்கு பாவ்னி, உங்களுக்கு டீ, காபி வேணுமா? உங்கள் படுக்கை அறையை சுத்தம் செய்ய வேண்டுமா? என கேட்கிறார். அதற்கு அக்ஷ்ரா, மூன்று பெண்களுக்கு எந்த உதவி வேணுமானாலும் செய்ய வேண்டும் என பிக் பாஸ் கூறியுள்ளார், எனவே நான் என்ன உதவி கேட்டாலும் நீங்கள் செய்து தான் ஆக வேண்டும் என்கிறார். அப்படி பார்த்தால் உங்கள் அனைத்து வேலைகளையும் என மேலே போட்டுவிடுவார்கள் என பாவ்னி கோவமாக பேசும் காட்சிகள் உள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்கள் விவரம் குறித்து பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில், அபினய் , இமான், அக்ஷ்ரா, நிரூப் மற்றும் சிபி என பிக் பாஸ் அறிவிக்கிறார். மேலும் உங்கள் நாணயத்தின் பவரை பயன்படுத்தி நாமினேஷனில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.

உங்களுக்கு பதிலாக ஒருவரை நாமினேட் செய்து கொள்ளலாம் என நிரூப்பிற்கு பிக் பாஸ் வாய்ப்பு கொடுக்கிறார். அதற்கு நிரூப், நான் சஞ்சீவை தேர்வு செய்கிறேன் என்கிறார். நீங்களும், சஞ்சீவும் ஒரு சவாலில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றால் இந்த நாமினிஷனில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவிக்கிறார். இதனால் இந்த சவாலில் யார் வெற்றி பெறுவார்? நிரூப் நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவாரா? என்ற முழு விவரமும் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment