100 கோடியை நெருங்கும் சிம்புவின் மாநாடு, 11 நாள் வசூல் விவரம்..!

by Column Editor

நடிகர் சிம்பு மற்றும் SJ சூர்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.

இப்படம் வெளியானது முதல் மிக சிறந்த விமர்சங்களை பெற்று தமிழகம் முழுவதிலும் பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருவதாக கூறப்படுகிறது.

சிம்புவின் நடிப்பில் நீண்ட வருடங்களுக்கு பிறகு பிளாக்பஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளதால், இப்படம் அவரின் முந்திய படங்களை விட அதிக வசூலை குவித்து வருகிறது.

இதனிடையே தற்போது மாநாடு படத்தின் உலகளவிலான வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படம் 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இப்படம் ரூ.100 கோடியை நெருங்கிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment