விஜய்யின் சாதனையை முறியடித்து, மீண்டும் No.1 இடத்திற்கு வந்த ரஜினி !

by Column Editor

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த.

பிரமாண்டமாக நேற்று உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம் பெரியளவிலான வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அதன்படி அண்ணாத்த படத்தின் முதல் தமிழ்நாடு காலக்ஷன் 25 கோடிக்கு மேல் இருக்கும் என நாம் முன்பு தெரிவித்து இருந்தோம்.

ஆனால் தற்போது அண்ணாத்த படத்தின் முதல் தமிழ்நாடு வசூல் ரூ 34.92 கோடி என்பது தெரியவந்துள்ளது.

ஆம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் சினிமா விமர்சகர் ஒருவரின் இந்த தகவலை ரீ-ட்விட் செய்துள்ளனர்.

இதனால் தற்போது தமிழகத்தில் 32 கோடி காலக்ஷன் உடன் முதல் இடத்தில் இருந்த சர்கார் படத்தை முந்தியுள்ளது அண்ணாத்த.

Related Posts

Leave a Comment