224
பாரதி கண்ணம்மா சீரியல் பரபரப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடிக்கடி பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சந்தித்து கொள்ளும் காட்சிகளை இயக்குனர் அதிகம் வைத்து வருகிறார்.
வெண்பாவை கண்ணம்மா போலீசிடம் சிக்க வைத்த சீன் எல்லாம் ரசிகர்களிடம் அதிகம் ரசிக்கப்பட்டது. அந்த சந்தோஷத்தில் இருந்தே ரசிகர்கள் வெளியே வரவில்லை அதற்குள் கண்ணம்மாவிற்கு ஒரு கஷ்டமான காட்சிளை வைத்துவிட்டார் இயக்குனர்.
பாரதி அனுப்பிய நோட்டீஸை பார்த்து கண்ணம்மா கதற பின் ஒரு முடிவுக்கு வருகிறார்.
தனது மாமியாரிடம் அப்படி அவர் விவாகரத்து பெற்றால் ஹேமாவை நான் அவரிடம் விட மாட்டேன், வீட்டிற்கும் அனுப்ப மாட்டேன் என அதிரடியாக கூறுகிறார்.