செந்திலின் தேர்வு முடிவை வெடி வைத்து கொண்டாடிய அமுதா ..

by Lifestyle Editor
0 comment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் பரிட்சையில் பாஸ் ஆகவில்லை என அன்னத்திடம் சொல்கிறான். அதை கேட்ட அன்னம் பரவாயில்லை நான் உன்ன தேவையில்லாம கஷ்டப்படுத்திட்டேன் என அவனுக்கு ஆறுதலாக பேசுகிறாள்.

ஆனால் இதையே அமுதாவிடம் சொல்ல அவள் நான் இந்த வீட்டில் இனி இருக்க மாட்டேன் என கோபமாக கிளம்ப, மாணிக்கம் அவளை தடுக்க அவள் செந்தில் பாஸ் ஆகிவிட்டதாக சொல்ல அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர்.

மேலும் அமுதா அன்னத்திடம் உங்க பையன் இவ்வளவு பெரிய டிராமா பண்ணும் போது நான் பண்ணக் கூடாதா என சொல்கிறாள். அதன் பிறகு வீட்டுக்கு வெளியே வெடி வைத்து கொண்டாடி அனைவருக்கும் இனிப்பு கொடுக்கின்றனர்.

செந்தில் அப்பாவின் புகைப்படத்தின் முன் வந்து நின்று அன்னம் மகன் பாஸ் ஆகிவிட்டான். இனி B.ED படிக்க போறான் அதையும் முடித்துவிட்டால் உங்கள மாதிரி, நான் ஆசைப்பட்ட மாதிரி வாத்தியார் ஆகி விடுவான் என உருக்கமாக பேசுகிறாள்.

அமுதா செந்திலுடன் சிதம்பரம் வீட்டிற்கு வர அங்கு நாகு அவளை திட்டுகிறாள். இதனால் இளங்கோ அவளை அடித்து அடக்குகிறான். பிறகு அமுதா சிதம்பரத்திடம் செந்தில் பாஸ் ஆன விஷயத்தை சொல்ல அவர் பேச மறுக்க இளங்கோ அமுதாவுக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment