மதுரையில் அழகர் வேடம் அணிந்து காணிக்கை பெறுவது ஏன் தெரியுமா …

by Lifestyle Editor

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.

10 நாள் நடக்கும் இந்த திருவிழாவில் விடிய விடிய மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் மாசிவீதிகளில் வலம் வரும் மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமியை தரிசனம் செய்வதற்காக திரளுவார்கள். அதே சமயத்தில் ஒரு சில பக்தர்கள் சுவாமி வேடம் அணிந்து, அதாவது சல்லடம், சலங்கு, பரிவட்டம் இதையெல்லாம் குன்னத்தூர் சத்திரத்தில் வாங்கி அந்த உடைகளை போட்டுக்கொண்டு வீதி வீதியாய் சென்று, வீடுகளில் காணிக்கை வாங்குவார்கள். இவை அனைத்தையும் நாம் பார்த்திருப்போம் ஆனால் எதற்காக இந்த வேடம் அணிந்து வீதி விதியாய் சென்று காணிக்கை வாங்குகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்று அவர்களிடையே கேட்கத் தொடங்கினோம்.

அவர்கள் முதலில் கோவிந்தோ கோவிந்து! என்று முழக்கமிட்டுபேசத் பேச தொடங்கினார்கள். எங்கள் ஊர் கடச்சநேந்தல் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக, பாரம்பரியத்தை விட்டு விடக்கூடாது என்று இதனை செய்து வருகின்றோம். எங்கள் தாத்தா காலத்தில் இருந்து இந்த மாதிரி வேடம் போட்டு அழகர்சாமி கொடியேற்றிய,அமாவாசை நாளில் இருந்து இதனை தொடங்க ஆரம்பிப்போம்.

மதுரை மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்றும், மதுரையில் மழை பொழிய வேண்டும் என்றும் மதுரையை செழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த வேதத்தை போட்டுக்கொண்டு சுமார் பத்து நாட்கள் அதாவது அழகர் மதுரைக்கு வந்து மீண்டும் அழகர் கோவில் செல்லும் வரை இதனை தொடர்ச்சியாக செய்வோம்.

அந்த காலத்தில் அழகர்சாமி ஸ்ரீவில்லிபுத்தூர் வரைக்கும் சென்றார். அப்பொழுது நாங்கள் சிறுபிள்ளையாக இருந்தோம். பின்னாளில் பரம்பரை பரம்பரையாக எங்கள் மூதாதையர் இதனை செய்து வந்ததால் தற்பொழுது வரை நாங்கள் இந்த வேடம் போடுகின்றோம். கொடியேற்றிய மூன்று நாட்களுக்கு முன்பு விரதம் எடுக்க ஆரம்பிப்போம்.

பின்பு அமாவாசை அன்று அழகர்சாமிக்கு கொடியேற்றிய பிறகு மாலை போட்டு,காப்பு கட்டி வந்து விடுவோம் பின்பு அம்மாவாசை அன்று இருந்து அழகர்சாமி வண்டியூர் வந்து பிறகு அழகர் கோவில் செல்லும் வரை இந்த விரதத்தையும் வேஷத்தையும் விட மாட்டோம்,கலைக்க மாட்டோம். அதுவரை சாமி பின்னாடியே சென்று அவரை அழகர் கோவில் சேர்த்த பிறகு தான் இந்த விரதத்தை முடிப்போம்.

விரதம் எடுக்கும் அமாவாசை நாளிலிருந்து, மதுரையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அதாவது அவனியாபுரம், மேலமடை, ஆனையூர், ஐயர் பங்களா, கிருஷ்ணாபுரம் காலனி, நரிமேடு, செல்லூர், வில்லாபுரம், சௌராஷ்ட்ரா காலனி, ஜெய்ஹிந்த்புரம்புதூர், சர்வேயர் காலனி, சூர்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு வீதி வீதியாய் சென்று காணிக்கைகளை பெற்று அந்த காணிக்கைகளை விரதம் முடிந்த அந்த நாளில் அழகர் கோவிலுக்கு சென்று காணிக்கையை அழகர்சாமிக்கு செலுத்தி விடுவோம்.

இரண்டு வேடங்கள் போடுகின்றோம் அதில் பதினெட்டாம் கருப்பு என்றால் திரியெடுத்து ஆடுவது, எதிர் சேவை என்று இந்த வேடம் போட்டு தல்லாகுளத்தில் உள்ள கருப்பண சுவாமிக்காக இரவில் நடக்கும் எதிர் சேவை என்று திரி எடுத்து ஆடுவோம். மற்றொன்று தண்ணீர் பீச்சும் அழகுமலையான் வேடம் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய பிறகு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெறும் அன்று இந்த வேடம் போட்டவர்கள் தண்ணீர் பீச்சி தீர்த்தவாரி செலுத்துவார்கள்.

அழகு மலையான் கட்டி வந்த சலங்கையை நாங்கள் கட்டி உற்சாகத்துடன் எதிர்சேவை மற்றும் தீர்த்தவாரி அன்று திரி எடுத்து ஆடுவது மற்றும் தீர்த்த வாரி ஆடுவோம். மதுரை மக்கள் செழிக்க வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் நோயின்றி நலமுடன் வாழ வேண்டும் என்று தான் இந்த காணிக்கையை தொடங்கி ஆட்டம் வரை ஆடி பிறகு அழகர் கோவில் சென்று எங்கள் விரதத்தை முடிப்போம் என்றனர்.

Related Posts

Leave a Comment