ரத்னாவுக்காக பொங்கல் வைக்கும் பாக்கியம்.. சௌந்தரபாண்டி கொடுத்த ஷாக்! கோபத்தில் பரணி!

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி நகை போலீஸ் ஸ்டேஷனில் இருக்கலாம் என்று சந்தேகப்பட வைகுண்டமும் சண்முகமும் அதுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பாக்கியம் ரத்னா பிரின்சிபால் ஆனா முருகனுக்கு பொங்கல் வைப்பதாக வேண்டி கொண்டிருந்ததாக சொல்லி எல்லாரையும் பொங்கல் வைக்க செல்கிறாள். சௌந்தரபாண்டியிடம் நீங்க நல்லா இருக்கணும்னு வேண்டிகிட்டு பொங்கல் வைக்க போவதாக சொல்கிறாள்.

மறுபக்கம் பரணி ஹாஸ்பிடலில் இருக்க ஷண்முகம் அவளை விட்டு எங்கும் போகாமல் அங்கேயே இருக்க பரணி ஒரு டீ குடிக்க கூப்பிட்டா கூட வர மாட்ட, இப்போ என்ன இங்கேயே இருக்க என்று கேட்க அவன் ஒன்றும் இல்லனு சொல்ல பரணி அருவாளை தூக்கிட்டு என் அப்பாவை வெட்ட போய்டுவேன்னு பயமா என்று கேட்கிறாள். ஷண்முகம் அய்யய்ய அப்படியெல்லாம் இல்ல என்று சொல்கிறான்.

மறுபக்கம் பாக்கியம் ஷண்முகத்தின் தங்கைகளை வர வைத்து கோவிலில் பொங்கல் வைத்து கொண்டிருக்க கோவிலில் வேலை செய்யும் கோபால் என்னம்மா பொங்கல் வைக்கறீங்க என்ன விஷயம் என்று கேட்க அவள் ரத்னாவுக்காக வைப்பதாக சொல்கிறாள். பிறகு சௌந்தரபாண்டி கோவிலில் கணக்கு வழக்குகளை பார்க்க வருகிறார். கோபால் அம்மா பொங்கல் வைக்க வந்திருக்காங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி எனக்காக தான பொங்கல் வைக்கிறா என்று சொல்கிறார். கோபால் அம்மா அப்படி சொல்லலையே என்று ரத்னா பற்றி சொல்ல சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறாள்.

திரும்பவும் கோபாலை அனுப்பி பாக்கியத்திடம் திரும்ப கேட்க சொல்லி சௌந்தரபாண்டி மறைந்து பார்க்க பாக்கியம் ரத்னாவுக்காக சொன்னதும் ஏன்டி என் வீட்டில இருந்துட்டு என்னை தோற்கடித்த குடும்பத்துக்கு பொங்கல் வைக்கறியா என்று பானையை எட்டி உடைத்து உடைக்கிறார். இங்கே ஒரு பெண்மணி காது அறுந்து ஹாஸ்பிடலுக்கு வர பரணி என்னாச்சு என்று கேட்க கோவிலில் வேலை செய்யும் கோபால் தான் என் புருஷன், குடிக்க காசு தரலைனு காதை அறுத்திட்டான் என்று சொல்கிறாள்.

Related Posts

Leave a Comment