சிவப்பு சோள கார பனியாரம்…

by Editor News

தேவையான பொருட்கள்

சிவப்பு சோளம்-2 கப்
அரிசி-அரை கப்
வெந்தயம்- ஒரு ஸ்பூன்
கடுகு- கால் டீஸ்பூன்
உளுந்து- கால்கப்
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை- தாளிக்க தேவையானளவு
தேங்காய்- துருவல் ஒரு கப்
பெருங்காயம்- ஒரு சிட்டிகை

பணியாரம் செய்முறை

முதலில் அரிசி, சோளம், உளுந்து என்பவற்றை சம அளவில் எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

பின்னர் இவை மூன்றுடன் வெந்தயம் கொஞ்சம் போட்டு மிக்ஸியில் அரைக்கவும். இந்த கலவையை சரியாக உப்பு சேர்த்து சுமாராக 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

இதனை தொடர்ந்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதங்கி எடுக்கவும்.

அரைத்து வைத்துள்ள மாவுடன் தாளிப்பை கலந்து கிளறி விட்டு, குழிப்பனியாரக்கல்லில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக ஊற்றி இறக்கினால் சுவையான சிவப்ப சோள குழிப்பனியாரம் தயார்!

Related Posts

Leave a Comment