வெண்டைக்காய் பொரியல்..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் – 1/4 கிலோ

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

துருவிய தேங்காய் – 3 டீஸ்பூன்

பூண்டு – 2 பல்

மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

தாளிக்க தேவையானவை :

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

வெண்டைக்காயை நன்றாக அலசி அதை தண்ணீர் இல்லாமல் துணியால் துடைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதை தேவையான அளவில் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி தனியே வைத்துக்கொள்ளவும்.

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு கொள்ளவும்.

கடுகு பொரிந்ததும் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து கலந்து வதக்கவும்.

வெண்டைக்காய் ஓரளவிற்கு சுருண்டு வெந்ததும் அதில் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

அதன் பச்சை வாசம் போனவுடன் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து வதக்கி இறக்கினால் சுவையான வெண்டைக்காய் பொரியல் ரெடி.

Related Posts

Leave a Comment