நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து வெளியேறினாரா நடிகர் செந்தில்

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் மதுரையை பின்னணியாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.

இதே பெயரில் கொரோனாவிற்கு முன் ஒரு கதை ஒளிபரப்பாகி வந்தது, அதுவும் ஹிட்டாக தான் ஓடியது, ஆனால் கொரோனாவிற்கு பின் அதே பெயரில் புதிய கதை ஒளிபரப்பானது.

சில நடிகர்கள் மாற்றமும் நடந்தது, இந்த புதிய கதையும் மக்களிடம் நன்றாக ரீச் ஆகிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

தொடரின் முக்கிய நாயகனாக நடித்து வருபவர் செந்தில். வானொலியும் பணிபுரியும் இவர் சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் மூலம் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தார்.

தற்போது என்ன தகவல் என்றால் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து வெளியேறி மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் நடிக்க போகிறார் என்ற செய்தி வைரலாக உலா வருகிறது, ஆனால் இது வதந்தியாம்.

செந்தில் ஜீ தமிழில் புதியதாக ஒளிபரப்பாக இருக்கும் ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்ள இருக்கிறாராம். மற்றபடி அவர் அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்கிறாராம்.

Related Posts

Leave a Comment