திடீரென ஒரு நாள் போட்டியிலிருந்து விலகிய விராட் கோலி.. அதிர்ச்சியில் மூழ்கிய பிசிசிஐ!

by Column Editor

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ-யின் அதிரடி முடிவால், ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதனிடையே இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதனையடுத்து, கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் செய்யும் போது அவருக்கு பந்து பட்டு காயம் ஏற்பட்டு, அவர் டெஸ்ட் அணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மாற்று வீரராக பிரியாங் பாஞ்சால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் , இது காயம் அல்ல, சரியான திட்டம் போட்டு வெளியேற்றப்பட்டார் ரோகித் சர்மா என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து விராட் கோலி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்திய அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. என்ன செய்வது என தெரியாமல் பிசிசிஐ விழி பிதுங்கி இருக்கிறது.

Related Posts

Leave a Comment