குணசேகரனை அடிக்க பாய்ந்த ஞானம்..

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.

அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை களமிறக்கியுள்ளனர். ஆனாலும் சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதுடன், குணசேகரன் மறைவிற்கு பின்பு இறங்கிய டிஆர்பி-யை ஏற்ற பல வழிகளில் சீரியல் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

தற்போது அந்த டிஆர்பி-யை கதிரை வைத்து பிரபல ரிவி அடைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கதிர் தனது அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளார்.

கதிர் மட்டுமின்றி ஞானமும் குணசேகரனை எதிர்த்து நிற்கும் நிலையில், ஈஸ்வரி குணசேகரனின் சதியால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. தர்ஷினியை கடத்தி வைத்திருப்பவர்களை ஜனனி நெருங்கியுள்ளார்.

மற்றொரு புறம் ஆதிரையை அடிக்க குணசேகரன் முயன்ற போது, ஞானம் குணசேகரனை எதிர்த்து அவரை அடிக்கவும் சென்றுள்ளார்.

இதுவரை குணசேகரனை கதிர் தான் பயங்கரமாக எதிர்த்து நின்ற நிலையில், தற்போது ஞானமும் குணசேகரனை அடிக்கும் அளவிற்கு சென்றுள்ளது சீரியலில் விறுவிறுப்பை அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment