இறால் ரோஸ்ட்..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

இறால் – 1/2 கிலோ

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்

எண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் இறாலை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு கல் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இறால் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் இந்த பாத்திரத்தை வைத்து அதிக தீயில் 5 நிமிடங்களுக்கு இறாலை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இறால் முக்கால் பதத்திற்கு வெந்தால் போதும்.

பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை குறைத்து பெருஞ்சீரகம் போட்டு பொரித்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் ஏற்கனவே வேகவைத்துள்ள இறாலை தண்ணீருடன் அப்படியே இதில் சேர்த்து கலந்து விட்டுக்கொள்ளவும்.

பிறகு அடுப்பை அதிக தீயில் வைத்து தண்ணீர் வற்றும் வரை கைவிடாமல் நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

தண்ணீர் முழுவதும் வற்றி மசாலாக்கள் இறாலுடன் நன்றாக கலந்து ட்ரையாக வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து தட்டிற்கு மாற்றினால் காரமான இறால் ரோஸ்ட் ரெடி…

Related Posts

Leave a Comment