குரூப் 4 தோ்வு: இன்று முதல் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்: டி.என்.பி.எ.சி அறிவிப்பு..

by Lifestyle Editor

டி.என்.பி.எ.சி குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பம் செய்தவர்கள் இன்று முதல் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வேண்டிய நிலை இருந்தால் திருத்திக் கொள்ளலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப்-4 தேர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மார்ச் 4 முதல் 6ம் தேதி வரை திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

6244 காலி பணி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் ஜனவரி 30 ஆம் தேதி விண்ணப்பம் தொடங்கி பிப்ரவரி 28ஆம் தேதி நிறைவேற்றந்தது.

இந்த நிலையில் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவார்கள் இன்று முதல் நாளை மறுநாள் வரை திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது என்றும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கான எழுத்து தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழ் தகுதி தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment