கணவரைப் பிரிந்தார் இத்தாலியின் பிரதமர் மெலோனி!

by Lankan Editor

இத்தாலியின் பிரதமர் ஜார்ஜு மெலோனி தனது கணவர் ‘ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவைப்‘ பிரிந்து விட்டதாக தனது உத்தியோக  பூர்வ x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளதாவது” கிட்டத்தட்ட பத்து வருடங்கள் நீடித்த ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவுடனான எனது உறவு இங்கே முடிகிறது. நாங்கள் ஒன்றாகக் கழித்த அற்புதமான வருடங்களுக்காகவும், நாங்கள் கடந்து வந்த சிரமங்களுக்காகவும், என் வாழ்க்கையில் மிக முக்கியமான விடயத்தை எனக்குக் கொடுத்ததற்காகவும் அவருக்கு நன்றி கூறுகிறேன்.

எங்கள் பாதைகள் சில காலமாக வேறுபட்டுவிட்டன, அதை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது ” இவ்வாறு மெலோனி பதிவிட்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 10 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இத்தம்பதிக்கு 7  வயதில் பெண் குழந்தையொன்று  உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment