பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிக்குமா அமெரிக்கா..!

by Editor News

பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு, அமெரிக்க எம்பிக்கள் 11 பேர், ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் மீறப்படுவதாகத் தெரிவித்தே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாகிஸ்தானில் தேர்தல்கள் நியாயமான முறையில் நடைபெற்று சட்டம் மற்றும் ஜனநாயகம் பராமரிக்கப்படும் வரை அந்நாட்டுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தி வைக்குமாறும் எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts

Leave a Comment