கின்னஸில் இடம் பிடித்த சன் டிவி அபியும் நானும் சீரியல் குழந்தை நட்சத்திரம்! 7 வயதில் இப்படியொரு சாதனையா?

by Column Editor

அபியும் நானும் சீரியலில் மீனா மற்றும் சிவாவின் மகனான முகில் என்ற குறும்புக்காரர் சிறுவனாக நடிக்கும் குழந்தை நட்சத்திரம்

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அபியும் நானும் சீரியல் குழந்தை நட்சத்திரம் முகிலன் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார். 7 வயதில் கின்னஸில் இடம்பிடித்த முகிலனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் தொலைக்காட்சிகளில் சன் டிவி சீரியலுக்கு என்று தனி இடம் உண்டு. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களே டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை பெற்று வருகின்றன.தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் அபியும் நானும். இதில்ரியா மனோஜ், வித்யா மோகன், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். குழந்தைகளின் அன்பை மையமாக கொண்ட இந்த சீரியலின் கதை தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அபியும் நானும் சீரியலில் மீனா மற்றும் சிவாவின் மகனான முகில் என்ற குறும்புக்காரர் சிறுவனாக நடிக்கும் குழந்தை நட்சத்திரம் நித்தீஷ் பற்றி சோஷியல் மீடியா ஃபேன்ஸூக்கு அறிமுகமே தேவைப்படாது. மிமிக்ரி, டைமிங் காமெடி என இந்த சின்ன வயதிலே சின்னத்திரையில் பட்டையை கிளப்பி வருகிறார் குழந்தை நட்சத்திரம் நித்தீஷ் . மாடலாகவும், விளம்பரங்களிலும் நித்தீஷ் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலங்களுடன் சேர்ந்து நித்தீஷ் செய்யும் இன்ஸ்டா ரீல்ஸ்கள் இணையத்தில் மிகப் பெரிய வைரல்.

சீரியலின் கதைப்படி, அபிஎன்ற சிறுமி, தனது தந்தையின் பணி நிமித்தமாக முகிலன் வீட்டிற்கு வருகிறாள். அபியை சிறிதும் விரும்பாத முகிலன். அவளை தனது எதிரி என்று நினைக்கிறான். அபி முகிலுடன் நண்பனாக முயற்சிக்கிறாள். இந்த தொடரின் கதை அபி மற்றும் முகில் என்ற இரண்டு குழந்தைகளைச் சுற்றி தான் நடக்கும். பாட்டியும் செல்ல பேரனாக, சித்தி சித்தப்பாவை கலாய்க்கும் படு சுட்டி பையனாக நித்தீஷ் நடித்து வருகிறான். நிஜயத்திலும் நித்தீஷ் அப்படியே முகிலன் போல தான்.

சின்னத்திரையில் முன்னணி நடிகர்கள் நடிகைகளாக இருக்கும் பலருடனும் நித்தீஷ் சேர்ந்து நடித்துள்ளான்.இந்நிலையில் தன்னுடைய 7 வயதில் நித்தீஷ் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளான். 60 கார்டூன் கதாபாத்திரங்களின் பெயர்களை 60 நொடிகளில் வேகமாக கூறி உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள குழந்தை நட்சத்திரம் நித்திஷூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஒரு பக்கம் சீரியல், ஸ்கூல் படிப்பு, என இந்த பிஸி வாழ்க்கையிலும் தனக்கு பிடித்த கார்டூன் மூலம் வித்தியாசமான சாதனை செய்து 7 வயதிலே கின்னஸ் புத்தக்கத்தில் இடம்பிடித்து விட்டார் அபியும் நானும் முகிலன்.

Related Posts

Leave a Comment