அட்டகாசமான ஹேர் ஸ்டைலில் வந்த பாக்கியலட்சுமி .. பாக்கியலட்சுமி சீரியல் …

by Lifestyle Editor

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா சென்ற அழகு நிலையத்திற்கு சென்ற பாக்கியலட்சுமி அட்டகாசமான ஹேர் ஸ்டைலில் வந்து வாயடைக்க வைத்துள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.

கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.

பாக்கியா எடுக்க வேண்டிய ஹொட்டல் ஆர்டரை ரத்து செய்ய வைத்த ராதிகா, பாக்கியலட்சுமியிடம் நேருக்கு நேர் சவால் விட்டுள்ளார். இந்நிலையில் பாக்கியா ராதிகா சென்றிருந்த அழகு நிலையத்திற்கு சென்றதுடன் தனது முடி அலங்காரத்தினை மாற்றியுள்ளார்.

பாக்கியாவின் புதிய கெட்டப்பை பார்த்த அனைவரும் வாயடைத்துள்ள நிலையில், குறித்த ப்ரொமோ தற்போது வைரலாகி வருகின்றது.

Related Posts

Leave a Comment