பொங்கல் பரிசு தொகுப்பு – ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு ..

by Lifestyle Editor

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பச்சரிசி, கரும்பு வழங்கப்பட வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூபாய் ஆயிரம் ரொக்க பணம் வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வீடுவீடாக ரேஷன் கடை ஊழியர்களால் அளிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பச்சரிசியின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என்று கூட்டுறவு ஊழியர்களுக்கு மண்டல இணைப்பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் தூய்மையான, வெண்மை நிறம் கொண்ட சர்க்கரை மட்டுமே பொங்கல் தொகுப்பிற்கு பயன்படுத்த வேண்டும் , 6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பு மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும், இரண்டு 500 ரூபாய் தாள்களை மட்டுமே வழங்க வேண்டும், பயனாளர்களை வேறு தேதிக்கு வாருங்கள் என சொல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment