இனி பூவே உனக்காக சீரியலில் பூவரசியாக நடிக்கப்போவது இவர் தான்!

by Column Editor

இனி பூவரசி கதாபாத்திரத்தில் சீரியல் நடிகை வர்ஷினி நடிக்கவிருக்கிறார். இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பான அக்னி நட்சத்திரம் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர்.

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் பூவரசியாக நடிக்க நடிகை வர்ஷினி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தமிழ் சேனல்களில் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பது சீரியல்கள் தான். ரியாலிட்டி ஷோக்கள் ஒரு பக்கம் சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தினாலும் , மீதி நேரங்களில் சேனல்களுக்கு துணை நிற்பவை சீரியல்களே. பிரபல முன்னணி தமிழ் சேனலாக உலக தமிழர்களிடையே புகழ் பெற்றிருக்கும் சன் டிவி-யில் நாள் முழுவதும் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் பிரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களின் அமோக ஆதரவு உள்ளது.

சன் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல் பூவே உனக்காக. இந்த சீரியலில் பூவரசி கேரக்டரில் ஹீரோயினாக நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக கதிரவன் என்ற கேரக்டரில் பிரபல சின்னத்திரைநடிகர்அசீம் நடித்து வருகிறார். முன்னதாக கதிரவன் கதாபாத்திரத்தில் அருண் நடித்து வந்தார். பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் அதிலிருந்து விலகினார்.

அதே போல் பூவே உனக்காக சீரியலில், பூவரசியின் தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகர்லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா. பின்னர் மேற்படிப்பை தொடர்வதாக அத்தொடரிலிருந்து விலகினார். பின்னர் சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அருவி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதையடுத்து முன்னணி கதாபாத்திரத்தில் பூவரசியாக நடித்து வந்த ராதிகா ப்ரீத்தியும் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் வேறு யார் நடிப்பார்கள் என்ற ஆவல் எழுந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது இனி பூவரசி கதாபாத்திரத்தில் சீரியல் நடிகை வர்ஷினி நடிக்கவிருக்கிறார். இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பான அக்னி நட்சத்திரம் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர். அதோடு இவர் ஒரு தேர்ந்த பரத நாட்டிய கலைஞரும் கூட. தான் பூவே உனக்காக சீரியலில் நடிக்கும் விஷயத்தை அவரே தனது இன்ஸ்டாகிராமிலும் அறிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment