மீனா அப்பாவின் நிஜ முகம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இப்படியொரு நிலைமையா?

by Column Editor

இந்த பிரச்சனைக்கு காரணமே கதிரும், கண்ணனும் தான் என்பது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அடுத்தடுத்து அடி விழ இப்போது சீரியல் சோகமாக சென்று கொண்டிருக்கிறது. புது கடை பிரச்சனை முடிந்தால் தான் குடும்பத்தில் ஆட்டம், பாட்டம் களைக்கட்டும்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி புதுக்கடை கட்டிய கதை பற்றி அனைவருக்கும் தெரியும். லோன் எடுத்து, நகைகளை வைத்து இந்த கடையை குடும்பத்தினர் சேர்ந்து கட்டினர். ஆனால் இப்போது கடை திறக்கப்படாமல் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை கடையை இடிக்க போவதாகவும் சொல்கின்றனர். இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர முடியாமல் மொத்த குடும்பத்தினரும் ஆடி போயியுள்ளனர். அதுமட்டுமில்லை இந்த பிரச்சனைக்கு காரணமே கதிரும், கண்ணனும் தான் என்பது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது.

அதாவது கண்ணன் கடையில் திருடிய பிரச்சனை பெரியதாக வெடிக்க, ராஜ்குமார் தான் திருடன் என மீனா கண்டுப்பிடித்து விடுகிறார். இதனால் ராஜ்குமாரின் வேலை பறி போகிறது. இந்த கோபத்தில் ராஜ்குமார், கண்ணனை ரவுடிகள் மூலம் அடித்து போட கோபத்தில் கதிர் போய் ரவுடிகளை பதிலுக்கு பதில் அடித்து விடுகிறார். அந்த ரவுடி ஒருவனின் அப்பா தான் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை திறக்க விடாமல் பிரச்சனை செய்து வருகின்றார்.

இந்த பிரச்சனைக்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் பற்றி மூர்த்தி, ஜீவா, முல்லை, தனம், மீனாவுக்கு தெரியாது. கண்ணனிடம் அந்த ரவுடிகள் உண்மையை சொல்ல, கண்ணன், ஐஸ்வர்யா, கதிருக்கு மட்டும் தான் இப்போதைக்கு நிஜ காரணம் தெரியும். இந்நிலையில் வெளியில் லாரியில் கடை பொருட்கள் நிற்க , குடோன் இல்லாமல் மொத்த குடும்பமும் தவிக்கிறது. மீனாவின் அப்பாவிடம் போய் உதவி கேட்கின்றனர். ஆனால் ,மீனா இதுதான் சமையம் என்று நிஜ முகத்தை காட்டுகிறார். மீனாவும் நேராக போய் அப்பாவிடம் உதவி கேட்கிறார். ஆனால் அவர் மனதில் வஞ்சகத்தை வைத்து கொண்டு உதவி செய்ய முடியாது என்கிறார்.

இதனால் மொத்த குடும்பமும் செய்வதறியாமல் நடு ரோட்டில் நிற்கின்றனர். அப்போது தான் போலீஸ் ஒருவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை இன்று இரவு இடிக்க உள்ளதாக ரகசியமாக வந்து தகவல் சொல்கிறார். இதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகி நிற்கின்றனர்.

Related Posts

Leave a Comment