அருள் வாக்கு சொன்ன சாமியார்… உடனே திருந்திய சீரியல் ஹீரோ!

by Column Editor

டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் எந்த சீரியலிலும் ஹீரோ கதாபாத்திரம் ரசிகர்களிடம் இவ்வளவு திட்டு வாங்கியது இல்லை.

பாரதி கண்ணம்மா சீரியலில் அம்மா , அப்பா, மனைவி என யார் சொல்லியும் திருந்தாத டாக்டர் பாரதி, சாமியார் சொன்ன உடனே ஒரு நாளில் திருந்தி விட்டார். இந்த சீரியல் புரமோவை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் பாரதி கேரக்டரை கலாய்த்து வருகின்றனர்.

டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் எந்த சீரியலிலும் ஹீரோ கதாபாத்திரம் ரசிகர்களிடம் இவ்வளவு திட்டு வாங்கியது இல்லை. பாரதி கண்ணம்மா சீரியலின் ஹீரோவான டாக்டர் பாரதி கதாபாத்திரத்தை திட்டி தீர்க்காத ரசிகர்களே இல்லை எனலாம். கண்ணம்மாவை சந்தேகப்பட்டதில் இருந்து, அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியது, வில்லி வெண்பாவை நம்புவது, அவருக்கு துணையாக செல்வது என பாரதியின் எல்லா முடிவுகளையும் சீரியல் ரசிகர்கள் திட்டிக் கொண்டே இருப்பார்கள். சீரியலின் ஹிரோவே பாரதி தான் என்றாலும் கண்ணம்மாவுக்கு எதிராக செயல்படும் போது அந்த கேரக்டரையே ரசிகர்கள் திட்ட தயாரகி விடுக்கின்றனர்.

இதுவும் இந்த சீரியலின் வெற்றிக்கு ஒருவித காரணம் தான். மொத்த குடும்பமும் கண்ணம்மாவுக்கு ஆதரவாக இருப்பது, கண்ணம்மாவை நம்பி பாரதியை குடும்பத்தில் இருப்பவர்கள் திட்டும் போதெல்லாம் பாரதி தரும் ரியாக்‌ஷன்களை ரசிக்கவும் ஒரு கூட்டம் உள்ளது. கூடவே ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தால் முடிய வேண்டிய சீரியலை மக்களை முட்டளாக்கிய இத்தனை ஆண்டுகளாக கடத்தி விட்டதாக நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து தள்ளுவதும் வழக்கம் தான்.

இந்நிலையில் தற்போது சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் விவகாரத்துக்காக 6 மாதம் ஒரே வீட்டில் தங்கி இருக்கின்றனர். இந்த 6 மாத காலத்தில் கண்ணம்மாவை பற்றி பாரதி புரிந்து கொள்வார் என நினைத்து மொத்த குடும்பமும் பிளான் செய்து இந்த வேலைகளை பார்த்து வருகின்றனர். ஆனால் யார் சொல்லியும் பாரதி குணம் மாறுவதாக இல்லை. கண்ணம்மா மீது அதே வெறுப்புடன் தான் நடந்து கொள்கிறார். அப்போது தான் சீரியலில் ட்விஸ்டாக சாமியார் ஒருவர் என்ட்ரி கொடுத்தார்.

அவர் பாரதிக்கு அருள் வாக்கு சொல்வது போல் சில விஷயங்களை சொன்னார். யாரை நம்ப வேண்டும், யாரை நம்ப கூடாது, எது உண்மை, கண்ணால் பார்பதை நம்ப கூடாது. பொறுமையை, நிதானத்தை ஒருபோதும் இழக்க கூடாது என ஏகப்பட்ட விஷயங்களை சொன்னார். அதிலிருந்து பாரதியின் நடவடிக்கைகள் அப்படி ஒரு மாற்றம். கண்ணம்மா மீது கோபப்படுவதையே நிறுத்தி விட்டார். அதுமட்டுமில்லை, எது உண்மை என்பதை பொறுமையாக யோசிக்கவும் தொடங்கி விட்டார்.

இந்த காட்சிகள் அடங்கிய புரமோவை பார்த்த ரசிகர்கள், 9 வருடங்களாக அம்மா, அப்பா, தம்பி என யார் சொல்லியும் மனம் மாறாத பாரதி ஒரே நாளில் சாமியார் சொன்னதும் திருந்தியது எப்படி? என வழக்கம் போல் கலாய்க்க தொடங்கி விட்டனர்.

Related Posts

Leave a Comment