வானத்தைப்போல சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது! பெண் யார் தெரியுமா?

by Lifestyle Editor

சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. அதில் நெகடிவ் கேரக்டர் ராஜபாண்டி ரோலில் நடித்து வருபவர் அஸ்வின் கார்த்திக்.

ஹீரோவின் தங்கை துளசியின் கணவர் ரோலில் நடித்து வரும் ராஜபாண்டியின் கதாபாத்திரம் அதிகம் வில்லத்தனமான காட்டப்பட்டு வருகிறது. துளசியுடன் உறவை வெட்டிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டம்போடும் வகையில் கதை சென்று கொண்டிருக்கிறது.

அஸ்வின் கார்த்திக் நடிப்பை பார்த்து அவரை திட்டாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தான் ராஜபாண்டி கதாபாத்திரம் மாறி இருக்கிறது.

இன்று திருமணம்..

சில மாதங்கள் முன்பு நடிகர் அஸ்வின் கார்த்திக் அவரது காதலி காயத்ரி என்பவரை நிச்சயதார்த்தம் செய்தார். அவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று அஸ்வின் கார்த்திக் மற்றும் காயத்ரி ஆகியோரது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

Related Posts

Leave a Comment