‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்… மாணவன் லுக்கில் அசத்தும் தனுஷ்!

by Column Editor

தனுஷ் நடிப்பில் உருவாகும் வாத்தி படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளார்.

நடிகர் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் புதிய படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தை தோழி பிரேமா’, ‘மிஸ்டர் மஜ்னு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறார். நடிகை சம்யுக்தா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை சிதாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

படத்திற்கு வாத்தி என்று தமிழிலும் சார் என்று தெலுங்கிலும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று வாத்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தனுஷ் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தனுஷின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் அவர் வாத்தி போல இல்லை. கல்லூரி மாணவன் போல் இருக்கிறார். இளமையான வாத்தி தான்!

இந்தப் படத்தை அடுத்து தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்திலும் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment