ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் – குரூப் கேப்டன் வருண் சிங் மரணம்!

by Column Editor
0 comment

கடந்த வாரத்தில் (டிசம்பர் 8) நீலகிரி மாவட்டம் குன்னூரில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துகுள்ளானது. இச்சம்பவத்தில், 13 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

இதில், ஹெலிகாப்டரில் சென்ற 14 பேரில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்திருந்தார். இதில் படுகாயமடைந்த அவர், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தகவலை விமானப்படை உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில், “டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த துணிச்சலான குரூப் கேப்டன் வருண் சிங்கின் காலமானதை தெரிவிப்பதில் விமானப்படை ஆழ்ந்த வருத்தமடைகிறது” என தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் அதாவது 14 பேரும் உயிரிழந்துள்ளனர். வருண் சிங் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment