554
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி.
இதில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்களின் மனதை கவர்ந்து வெற்றியடைந்துள்ளது.
ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களை உதாரணமாக கூறலாம்.
இதே போல் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாக துவங்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சீரியல் வேலைக்காரன்.
விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வேலைக்காரன் சீரியல் விரைவில் முடிவடைவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி, வேலைக்காரன் சீரியல் ரசிகர்களுக்கும் பெரும் வருத்தத்தையும் ஷாக்கையும் கொடுத்துள்ளது.