குழந்தை பெற்றபிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்த பரீனா

by Column Editor

பாரதி கண்ணம்மா விஜய்யின் டாப் சீரியல்களில் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் டாப் சீரியல்களில் கூட பாரதி கண்ணம்மா முதல் இடத்தில் எல்லாம் வந்திருக்கிறது.

அண்மையில் சீரியலின் நாயகி ரோஷினி தொடரில் இருந்து வெளியேற அவருக்கு பதில் இப்போது வினுஷா என்பவர் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

ஆனாலும் சீரியலின் TRPக்கு எந்த பாதிப்பும் இல்லை. அடுத்தடுத்து வரும் சீரியலின் எபிசோடுகளும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் பரீனா, வெண்பா என்ற வேடத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தால் தான் இப்போது வரை தொடர் ஓடிக் கொண்டு வருகிறது. காரணம் அவர் செய்த வில்லத்தனம் அப்படி.

நிஜத்தில் கர்ப்பமாக இருந்த அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இப்போது குழந்தை பிறந்து சில நாட்கள் ஆன நிலையில் மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியல் செட்டிற்கு நடிக்க வந்துள்ளார்.

Related Posts

Leave a Comment