அவர் எப்பவுமே வேற லெவல் தான், ஒவ்வொரு தருணத்தையும் ரசிச்சிருக்கேன் – விராட் குறித்து ரோஹித் பேச்சு

by Column Editor

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு அணிய வழிநடத்த உள்ளார் ரோகித் ஷர்மா.

இந்த நிலையில் தனக்கு முன்னதாக கேப்டன் பணியை கவனித்து வந்த விராட் கோலியின் புகழை போற்றி பாடியுள்ளார் அவர்.

மிகவும் துணிச்சலுடனும், உறுதியுடனும் அணியை வழிநடத்திச் சென்றவர் கோலி என ரோகித் தெரிவித்துள்ளார்.

“இந்திய அணியை அவர் கேப்டனாக முன்னின்று வழிநடத்திய இந்த ஐந்து ஆண்டுகளை ஒருபோதும் மறக்க முடியாது.

ஒவ்வொரு முறையும் அணியை வெற்றிப் பெற செய்ய வேண்டுமென்ற உறுதியும், அதற்கான அர்ப்பணிப்பையும் அவர் களத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.

அது ஒட்டுமொத்த அணிக்கும் அவர் கொடுக்கும் மெசேஜாக இருக்கும். அவரது தலைமையின் கீழ் விளையாடியது மிகவும் அற்புதமானது.

நானும் அவரும் ஒன்றாக இணைந்து நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளோம். அவருடனான அந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன். அதை தொடர்ந்து செய்வோம்” என தெரிவித்துள்ளார் ரோகித் ஷர்மா.

Related Posts

Leave a Comment